உலகின் சிறந்த 'டாப்' 100 விமான நிலையங்கள் பட்டியல் இதோ; 4 இந்திய விமான நிலையங்கள் சாதனை!

17


புதுடில்லி: உலகில் 100 சிறந்த விமான நிலையங்கள் பட்டியலில், டில்லி உள்பட இந்தியாவில் 4 விமான நிலையங்கள் இடம் பெற்றுள்ளன.



மக்கள் அனைவரும் விமானத்தில் விரும்பி பயணம் செய்து வருகின்றனர். கோவிட் தொற்றுக்கு பிறகு விமானத்தில் பயணம் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. உலகெங்கிலும் உள்ள 565 விமான நிலையங்களில் ஸ்கைட்ராக்ஸ் நிறுவனம் பயணிகளிடம் சேவை குறித்து ஆய்வு நடத்தி உள்ளது.


ஸ்கைட்ராக்ஸ் என்பது, உலகெங்கிலும் உள்ள விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்களின் தரவரிசை, மதிப்பீடு மற்றும் விருது வழங்கும் ஒரு பிரிட்டிஷ் விமான போக்குவரத்து ஆராய்ச்சி நிறுவனமாகும்.



இந்த நிறுவனம் உலகில் 100 சிறந்த விமான நிலையங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. டில்லி உள்பட இந்தியாவில் 4 விமான நிலையங்கள் இடம் பெற்றுள்ளன. இருப்பினும், உலகின் முதல் 20 இடங்களில் எந்த இந்திய விமான நிலையமும் இடம்பெறவில்லை, இந்த முறை தரவரிசை பட்டியலில் முன்னேறி உள்ளது.
* டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் 32வது இடம்



* பெங்களூரு விமான நிலையம் 48வது இடம்


* ஐதராபாத் விமான நிலையம் 56வது இடம்


* மும்பை விமான நிலையம் 73வது இடம்.

'டாப்' 20 விமான நிலையங்கள்




1. சாங்கி விமான நிலையம் (சிங்கப்பூர்)



2. ஹமாத் சர்வதேச விமான நிலையம் (தோஹா)


3. ஹனேடா விமான நிலையம் (டோக்கியோ)


4. இன்சியான் சர்வதேச விமான நிலையம் (சியோல்)


5. நரிடா சர்வதேச விமான நிலையம் (டோக்கியோ)


6. ஹாங்காங் சர்வதேச விமான நிலையம்


7. சார்லஸ் டி கோல் விமான நிலையம் (பாரிஸ்)


8. ரோம் பியமிசினோ விமான நிலையம்


9. மியூனிக் விமான நிலையம் (ஜெர்மனி)


10. சூரிச் விமான நிலையம் (சுவிட்சர்லாந்து)


11. துபாய் சர்வதேச விமான நிலையம்


12. ஹெல்சின்கி விமான நிலையம்


13. வான்கூவர் சர்வதேச விமான நிலையம் (கொலம்பியா)


14. இஸ்தான்புல் விமான நிலையம்


15. வியன்னா சர்வதேச விமான நிலையம்


16. மெல்போர்ன் விமான நிலையம்


17. சென்ட்ரேர் சர்வதேச விமான நிலையம்


18. கோபன்ஹேகன் விமான நிலையம்


19. ஆம்ஸ்டர்டாம் ஷிபோல் விமான நிலையம்


20. பஹ்ரைன் சர்வதேச விமான நிலையம்

Advertisement