ஆபாச பேச்சாளர் பொன்முடி; இன்னும் அமைச்சர் பதவியில் நீடிப்பதால் தி.மு.க., அரசுக்கு தான் கெட்ட பெயர்!

சென்னை: பெண்களைப் பற்றி அச்சில் ஏற்ற முடியாத வகையில் ஆபாசமாக பேசிய அமைச்சர் பொன்முடியின் கட்சி பதவியை பறித்து தி.மு.க., தலைமை உத்தரவிட்டுள்ளது. பொன்முடியின் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் கண்டனம் வலுத்து வருகிறது. அவரை அமைச்சர் பதவியில் இருந்தும் நீக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
தற்போதைய தி.மு.க., அரசில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. அண்மையில் விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், இவர் பெண்கள் குறித்தும், சைவம், வைணவத்தை அவமதிக்கும் வகையில் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரது பேச்சு அருவருக்கத்தக்கதாக, காதில் கேட்கவே முடியாத ஒன்றாக உள்ளது.
நாராச நடையில் ஆபாசமாக அமைச்சர் பேசியதற்கு கண்டனம் வலுத்து வருகிறது. அமைச்சரின் ஆபாச பேச்சு பெண்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. அமைச்சர் பொன்முடியின் பேச்சிற்கு, தி.மு.க., எம்.பி., கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''அமைச்சர் பொன்முடியின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப் பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது'' என குறிப்பிட்டுள்ளார்.
பதவி பறிப்பு
பெண்களைப் பற்றி ஆபாசமாக பேசிய அமைச்சர் பொன்முடியின் கட்சி பதவியை (துணை பொதுச்செயலாளர்) பறித்து தி.மு.க., தலைமை உத்தரவிட்டுள்ளது. வழக்கமாக பதவி பறிப்பு அறிவிப்புகள் அனைத்தும் பொதுச்செயலாளர் துரைமுருகன் பெயரில் தான் வெளியாகும்;
ஆனால் இன்றைய பதவி பறிப்பு அறிவிப்பு முதல்வர் ஸ்டாலின் பெயரில் வெளியாகியுள்ளது. இது தி.மு.க., தலைமைக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்துவதாக கட்சி நிர்வாகிகளும், நெட்டிசன்களும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
நெட்டிசன்கள் கண்டனம்
நெட்டிசன்கள் பலரும் அமைச்சருக்கும், தி.மு.க.,வுக்கும் கடும் கண்டனத்தை பதிவிட்டு வருகின்றனர். அவர்களில் பலரும், அமைச்சர் பதவியை பொன்முடியிடம் இருந்து பறிக்க வேண்டும் என்றும், கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, அவரது அமைச்சர் பதவி விரைவில் பறிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
திருச்சி சிவா நியமனம்
பொன்முடியிடம் இருந்து பறிக்கப்பட்ட துணை பொதுச்செயலாளர் பதவி, கட்சியின் ராஜ்யசபா எம்.பி., திருச்சி சிவாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அமைச்சர் பொன்முடியின் சமீபத்திய பேச்சு வன்மையான கண்டனத்திற்குரியது. பொறுப்பற்ற இந்த பேச்சுக்காக அவர் பகிரங்கமாக வருத்தம் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.












மேலும்
-
பாதுகாப்புத்துறையில் ரூ.50 ஆயிரம் கோடி ஏற்றுமதிக்கு இலக்கு: ராஜ்நாத் சிங்
-
மருதமலை முருகன் கோவிலுக்கு வாகனங்களில் செல்ல புதிய கட்டுப்பாடு: கோவில் நிர்வாகம் அறிவிப்பு
-
மத்திய அரசு செயலாளர்கள் மாற்றம்: வருவாய்த்துறை செயலராக அர்விந்த் ஸ்ரீவஸ்தவா நியமனம்
-
நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தின் ரூ.600 கோடி சொத்துகள்: அமலாக்கத்துறை முடக்கம்
-
திருமணம் அன்றே குழந்தை பிறந்தால் வேறு விதமாக தான் இருக்கும்: தி.மு.க., எம்.பி., கல்யாணசுந்தரம் பேச்சு
-
வேடசந்தூர் அருகே லாரி - கார் மோதல்: 3 பேர் பலி