குட்கா கடத்தி சென்ற கார் விபத்தில் சிக்கியது

குட்கா கடத்தி சென்ற கார் விபத்தில் சிக்கியது

தர்மபுரி, ஏதர்மபுரி அருகே, தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளான காரில், தடை செய்யப்பட்ட குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தர்மபுரி அடுத்த, மதிகோண்பாளையம் எஸ்.எஸ்.ஐ., குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு கிருஷ்ணகிரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் குண்டலபட்டி பிரிவு சாலை அருகே, வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த ஹூண்டாய் ஐ10 கார் மீது, பின்னால் வந்த இரு கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஹூண்டாய் கார் ஓட்டுனர் காரை சர்வீஸ் சாலையில் நிறுத்தி விட்டு தப்பிச் சென்றார்.
இதில், சந்தேகமடைந்த போலீசார் காரை சோதனை செய்தபோது, அதில், 14 மூட்டைகளில், 140 கிலோ எடை கொண்ட, 1.40 லட்சம் ருபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்து தெரிய வந்தது. இதையடுத்து, காருடன் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, தப்பிச்சென்ற ஓட்டுனர் குறித்து, மதிகோன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement