அ.தி.மு.க., அரசியல் அடையாளம் இழக்கும்

9

அ.தி.மு.க., அரசியல் அடையாளம் இழக்கும்



மாநில உரிமைகளையும், மக்களின் நம்பிக்கையையும் பாதுகாக்க வேண்டிய கடமை ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் உள்ளது. ஆனால், அ.தி.மு.க.,வின் பா.ஜ.,வுடனான கூட்டணி முடிவு, அந்தக் கடமையை மறந்து, மத்திய பா.ஜ.,அரசின் அழுத்தத்திற்கு அடிபணிந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.




கூடா நட்பு கேடாய் முடியும் என்பது பழமொழி மட்டுமல்ல, அரசியல் உண்மையும் கூட. பா.ஜ., உடன் கூட்டணி வைத்த பல மாநிலக் கட்சிகள் இன்றைக்கு, அவை தங்கள் அரசியல் அடையாளத்தை இழந்து, மக்களின் நம்பிக்கையைத் தொலைத்து, தோல்வியின் பாதையில் நிற்கின்றன.இந்தக் கூட்டணி மூலம், அ.தி.மு.க.,வும் அதே பாதையைத் தேர்ந்தெடுத்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.


தமிழக மக்களின் நலனுக்கு எதிராகவும், மாநில உரிமைகளுக்கு எதிராகவும் செயல்படும் பா.ஜ., உடன் கைகோர்ப்பது, எந்தவொரு மாநிலக் கட்சிக்கும் அழிவைத் தவிர வேறு எதையும் கொண்டுவராது.நெல்லை முபாரக், தலைவர், எஸ்.டி.பி.ஐ.,

Advertisement