அநாகரிகம், ஆபாசம், தரம் தாழ்ந்த பேச்சு
கோவை; தி.மு.க., கூட்டணிக் கட்சியான கொ.ம.தே.க., பொதுச்செயலரும், எம்.எல்.ஏ.,வுமான ஈஸ்வரன் அறிக்கை :
பொதுவெளியில் அமைச்சர் பொன்முடி, பெண்கள் பற்றி ஆபாசமாக, அநாகரிகமாக பேசியதை கண்டிக்கிறோம்.
இந்தப் பேச்சு, தமிழக முதல்வருக்கு சங்கடத்தை கொடுத்திருக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் கருத்துகளை தெரிவிக்கும்போது, எந்த ஒருசாரரின் மனமும் புண்படும் அளவுக்கு பேசக்கூடாது.
அரசியல் ரீதியாக விமர்சனம் செய்வதிலோ, எதிர்கருத்துகளை பேசுவதிலோ எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் பயன்படுத்துகிற வார்த்தைகள், ஆபாசமாகவோ அடுத்தவர் மனதை புண்படுத்துகிற விதத்திலோ இருக்கக் கூடாது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement