திருவொற்றியூரில் வி.ஜி.என்., திட்டம் 490 கேட்டட கம்யூனிட்டி மனை தயார்

சென்னை,சென்னை திருவொற்றியூரில், வி.ஜி.என்., பாரடைஸ் திட்டத்தில், 490 கேட்டட் கம்யூனிட்டி மனைகள் விற்பனைக்கு உள்ளன.

இது தொடர்பாக, வி.ஜி.என்., குழுமம் வெளியிட்ட அறிவிப்பு:

முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான வி.ஜி.என்., குழுமம், திருவொற்றியூர் விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே, புதிய மனைப்பிரிவை ஏற்படுத்தி உள்ளது.

இங்கு, 753 சதுர அடி முதல், 1,500 சதுர அடி வரையிலான பரப்பளவுகளில், 490 கேட்டட் கம்யூனிட்டி வீட்டுமனைகள் உருவாக்கப்பட்டு உள்ளன.

இந்த மனைப்பிரிவில் பாதாள சாக்கடை, மெட்ரோ குடிநீர், குழாய் வாயிலாக இயற்கை எரிவாயு, நிலத்தடி மின் கம்பிகள், மழை நீர் வடிகால் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ளன.

மனையை வாங்கியவுடன் வீடு கட்டி குடியேறும் வகையில், இந்த வசதிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

இங்கு, ஒரு சதுர அடி, 7,999 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. குறிப்பிட்ட காலத்திற்கு சதுர அடி, 7,199 ரூபாய் என்ற சலுகை விலையில் மனைகள் கிடைக்கும்.

இந்த வளாகத்தில், 11,000 சதுர அடியில் கிளப் ஹவுஸ், 60,000 சதுர அடியில் பூங்கா உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இது தொடர்பான கூடுதல் விபரங்கள் பெற, 044 - 4002 4010 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

***

Advertisement