கிணற்றில் விஷவாயு கசிந்து ம.பி.,யில் எட்டு பேர் பலி
இந்துார்: மத்திய பிரதேசத்தில், இந்துார் அருகே உள்ள கோண்டாவட் கிராமத்தில் நேற்று முன்தினம் திருவிழா நடந்தது. இதையொட்டி, சுவாமி சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க முடிவு செய்தனர்.
அதற்காக, அந்த கிராமத்தில் உள்ள, 150 ஆண்டுகள் பழமையான கிணற்றை சுத்தப்படுத்த முடிவு செய்தனர். இதற்காக நேற்று முன்தினம் அந்த கிணற்றில் ஐந்து பேர் இறங்கினர். கிணற்றுக்குள் கழிவுகளை அகற்றிக் கொண்டிருந்த போது விஷவாயு தாக்கியது; இதில் ஐந்து பேரும் மயக்கமடைந்தனர்.
அதை மேலிருந்து பார்த்துக் கொண்டிருந்தவர்களில் மூவர் இறங்கினர். அவர்களும் விஷவாயுவை சுவாசித்ததால் மயக்கம் அடைந்தனர். சிறிது நேரத்தில், கிணற்றின் உள்ளேயே எட்டு பேரும் இறந்தனர்.
நீண்ட காலமாக புழக்கத்தில் இல்லாத அந்த கிணற்றில் விஷவாயு கசிந்த விவகாரம் குறித்து, போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. மாநில பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு உபகரணங்களுடன் கிணற்றில் இறங்கி, இறந்து கிடந்தவர்களை மீட்டனர்.
இதுகுறித்து விசாரணை நடத்த முதல்வர் மோகன் யாதவ் உத்தரவிட்டுள்ளார். விஷவாயு கசிந்த அந்த தனியாருக்கு சொந்தமான கிணற்றை உடனடியாக மூடி, 'சீல்' வைக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
சோனியா, ராகுல் தொடர்புடைய ரூ.700 கோடி சொத்துக்கள்: பறிமுதல் நடவடிக்கை தொடங்கியது அமலாக்கத்துறை
-
மக்களுக்கு சேவை செய்வதில் ஐ.ஏ.எஸ். பதவியை விட அரசியலில் மகிழ்ச்சி: சத்தீஸ்கர் அமைச்சர் நெகிழ்ச்சி
-
பா.ஜ., தலைவர் வீட்டில் கையெறி குண்டு வீசிய முக்கிய குற்றவாளி டில்லியில் கைது
-
அமைச்சர்களுக்கு ரூ.2.71 கோடியில் சொகுசு கார்கள்; கேரள அரசின் தாராளம்
-
பயங்கரவாதி ராணாவிடம் என்.ஐ.ஏ., அதிகாரிகள் துருவித் துருவி விசாரணை: துபாய் தொடர்பு அம்பலம்
-
கடைசி ஓவரில் சிக்சர் மழை; ஐதராபாத்துக்கு 246 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப்