ப.நடுப்பட்டி அரசுபள்ளியில் ஆண்டு விழா


ப.நடுப்பட்டி அரசுபள்ளியில் ஆண்டு விழா


ஊத்தங்கரை:ஊத்தங்கரை அடுத்த, சிங்காரப்பேட்டை ப.நடுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
வட்டார கல்வி அலுவலர் சாந்தி தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் குப்புசாமி வரவேற்றார். தொ.ப.ஆ. மன்றம் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய செயலாளர் பழனி ஆகியோர் வாழ்த்தி பேசினர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.
ஒன்றிய பொருளாளர் விஜயன், குப்பநத்தம் பள்ளி தலைமை ஆசிரியர் அண்ணாமலை, ஆசிரியர் சாமுவேல் ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் திலகா நன்றி கூறினார்.

Advertisement