வனத்துறை அலுவலர்களுக்குதீ தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி


வனத்துறை அலுவலர்களுக்குதீ தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி



பாப்பிரெட்டிப்பட்டி:--தர்மபுரி மாவட்ட தீயணைப்பு அலுவலர் அம்பிகா உத்தரவின்படி, வெப்ப அலை மற்றும் ஆரம்ப கட்ட தீ தடுப்பு விழிப்புணர்வு குறித்து, பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொ) செந்தில், பிரகாசம் தலைமையில் பாப்பிரெட்டிப்பட்டி வனக்கோட்ட வனத்துறை பணியாளர்களுக்கு
தீ தடுப்பு விழிப்புணர்வு ஒத்திகை பயிற்சி நடந்தது. வெப்ப அலையால், வனப்பகுதியில் தீ விபத்து ஏற்படும் போது எவ்வாறு தீயை அணைப்பது, விபத்தில் சிக்கிக் கொண்டால் எப்படி காப்பாற்ற வேண்டும் உள்ளிட்ட பயிற்சி அளித்தனர். தொடர்ந்து தீ தடுப்பு குறித்து ஆலோசனைகள் வழங்கி செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. பயிற்சியில் வனவர்கள் ராகுல், உதயகுமார் உள்ளிட்ட வனத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement