தடகளம், ஜூடோ போட்டிக்கு இலவச பயிற்சி முகாம் துவக்கம்
கோலார்: கோலாரில் தடகள விளையாட்டு, ஜூடோ போட்டிக்கு இலவச பயிற்சி முகாம் நேற்று துவங்கியது.
கோலாரில் உள்ள சர்.எம். விஸ்வேஸ்வரய்யா மைதானத்தில், தடகள விளையாட்டு மற்றும் ஜூடோ கோடைக்கால பயிற்சி முகாம் இலவசமாக நடத்தப்படுகிறது.
பாராலிம்பிக் விளையாட்டு சங்கத் தலைவர் ஜெயதேவ் பயிற்சியை துவக்கி வைத்து, சிறுவர்களுக்கு விளையாட்டுக்கான சீருடைகள் வழங்கினார்.
இந்த முகாம், இரு கட்டமாக நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக நேற்று துவங்கி மே 1 வரையிலும், 2ம் கட்டமாக மே 1 முதல் மே 26 வரையிலும் நடத்தப்படுகிறது.
தடகள விளையாட்டுகளில் பங்கேற்க 10 முதல் 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும், ஜூடோ பயிற்சிக்கு 10 வயது முதல் 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
விளையாட்டு பயிற்சியாளர் ஜெகன் கூறுகையில், ''விளையாட்டில் ஈடுபாடு இருந்தால் வாழ்நாள் முழுதும் ஆரோக்கியமாக இருக்க முடியும். சோர்வு ஏற்படாது. எப்போதுமே உற்சாகமாக இருக்கலாம். எனவே விளையாட்டில் சிறு வயதிலேயே ஈடுபாடு மிக அவசியம்.
''நேரத்தை வீணாக்காமல், முடங்கி கிடக்காமல் விளையாட்டில் சிறுவர்கள் கவனம் செலுத்தி, சிறப்பாக விளையாடி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும்.
''பெற்றோரும் ஊக்கம் அளிக்க வேண்டும். ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்தில் கோலாரில் தேசிய விளையாட்டுப் போட்டி நடத்த ஏற்பாடுகள் நடக்கின்றன,'' என்றார்.
மேலும்
-
முதல்வர் ஸ்டாலின் இன்னும் எத்தனை நாட்கள் தமிழக மக்களை ஏமாற்ற முடியும்? இபிஎஸ் கேள்வி
-
சென்னை அணி தோற்றது ஏன்: மைக்கேல் கிளார்க் விளக்கம்
-
மும்பையில் டேபிள் டென்னிஸ் ஏலம்
-
லக்னோ அணி கலக்கல் வெற்றி * குஜராத் அணிக்கு முதல் தோல்வி
-
பில்லியர்ட்ஸ்: அத்வானி 'வெள்ளி'
-
மாறுகிறது கிரிக்கெட் விதிகள் * பவுலர்களுக்கு சாதகமாக...