சுந்தரேஸ்வரர் கோவில் குளம்துார்வார ரூ.62 லட்சம் ஒதுக்கீடு


சுந்தரேஸ்வரர் கோவில் குளம்துார்வார ரூ.62 லட்சம் ஒதுக்கீடு


குளித்தலை:கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த நங்கவரம் சுந்தரேஸ்வரர் கோவிலில் உள்ள தெப்பக்குளத்தின் திருப்பணிக்கு, எம்.எல்.ஏ., மாணிக்கம் பரிந்துரையின்படி, ஹிந்து சமய அறநிலையத் துறையின் ஆணையர் பொதுநல நிதி மூலம், 62 லட்சத்து, 90 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதையடுத்து மண்டல செயற்பொறியாளர் ஆனந்தராஜ், உதவி செயற்பொறியாளர் சரண்யா, உதவி பொறியாளர் சுர்ஜித், செயல் அலுவலர் நரசிம்மன் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர். விரைவில் திருப்பணி துவங்கி நடைபெற உள்ளது. தி.மு.க., செயலாளர் சந்திரன், நகர செயலர் முத்து, கவுன்சிலர் செந்தில்வேலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement