பெரிய மாரியம்மன் கோவில் கம்பம் ஊர்வலம்
பெரிய மாரியம்மன் கோவில் கம்பம் ஊர்வலம்
ஈரோடு:ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களில் இன்று கம்பம் பிடுங்கும் விழா, மஞ்சள் நீராட்டு நடப்பதால், போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாநகரின் பெரிய மாரியம்மன் கோவில், அதன் வகையறா கோவில்களான சின்ன மாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோவில்களில், நடப்பாண்டு குண்டம் மற்றும் தேர்த்திருவிழா கடந்த, 18ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. முக்கிய நிகழ்வாக கடந்த, 1ல் காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் குண்டம் விழா, 2ம் தேதி சின்ன மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.
விழா இறுதி நிகழ்வாக பெரிய மாரியம்மன் உட்பட மூன்று கோவில்களிலும் கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி இன்று மதியம், 3:00 மணிக்கு நடக்கிறது. மூன்று கோவில்களின் கம்பங்களை பிடுங்கி, பூசாரிகள் தோளில் சுமந்தபடி ஊர்வலமாக வருவர். பெரிய மாரியம்மன் கோவில் கம்பம் பன்னீர்செல்வம் பூங்கா வழியாகவும், சின்ன மாரியம்மன் கோவில் கம்பம் அக்ரஹாரம் வீதி வழியாகவும், காரை வாய்க்கால் மாரியம்மன் கோவில் கம்பம் கச்சேரி வீதி வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்படும்.
மணிக்கூண்டு பகுதியில் மூன்று கம்பங்களும் ஒன்று சேரும். பின், ஈஸ்வரன் கோவில் வீதி வழியாக காமராஜர் வீதி, மீனாட்சிசுந்தரனார் சாலை, அரசு மருத்துவமனை ரவுண்டானா, மேட்டூர் சாலை, பஸ் ஸ்டாண்ட், சுவஸ்திக் கார்னர், சத்தி சாலை, எல்லை மாரியம்மன் கோவில், மணிக்கூண்டு, பெரியார் வீதி, மரப்பாலம் மண்டபம் வீதி, ஆர்.கே.வி., சாலை, டவுன் போலீஸ் ஸ்டேஷன், அக்ரஹாரம் வீதி வழியாக இரவில் காரை வாய்க்காலை அடைந்து, வாய்க்காலில் விடப்படும். இந்த ஊர்வல பாதையில் வாகனங்களுக்கு அனுமதி இல்லை. அந்தந்த பகுதியில் மாற்று பாதையில் வாகனங்கள் திருப்பிவிடப்படும்.
கம்பம் பிடுங்கப்பட்டதும், மஞ்சள் நீராட்டு விழா நடக்கும். சிறுவர், சிறுமியர், இளைஞர், பெண்கள் என அனைத்து தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் மஞ்சள் நீரை ஊற்றி, மஞ்சள் நீராட்டு விழாவை கொண்டாடுவர். விழாவையொட்டி எஸ்.பி., சுஜாதா தலைமையில், 600 போலீசார், ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
மேலும்
-
மேலமடை ரோட்டில் பள்ளம் வாகன ஓட்டிகள் அச்சம்
-
கடலாடி ஐ.டி.ஐ.,யில் புதிய கட்டடத்திற்கு எதிர்பார்ப்பு
-
மிளகாய்க்கு வேளாண் காப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தல்
-
மணற்பாங்கான பகுதிகளில் எள் சாகுபடி விழிப்புணர்வு ஏற்படுத்தாத வேளாண் துறை
-
விழிப்புணர்வு
-
தென்னையை தாக்கும் கருந்தலை புழுக்கள்; விவசாயிகளிடம் விழிப்புணர்வு