மகளுக்கு பாலியல் தொந்தரவு தந்தைக்கு வாழ்நாள் சிறை

சிவகங்கை:சிவகங்கை மாவட்டத்தில் மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தைக்கு -வாழ்நாள் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இம்மாவட்டத்தைச் சேர்ந்த 47 வயது கட்டட தொழிலாளி 2020 ல் 8 வயது மகளை பாலியல் தொந்தரவு செய்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறுமியை பரிசோதித்த டாக்டர் அளித்த தகவலின்படி, சமூகநலத்துறையினர் விசாரித்து 2020 பிப்., 15 ல் போலீஸ் ஸ்டேஷனில் தந்தைக்கு எதிராக புகார் அளித்தனர்.

இவ்வழக்கு சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி கோகுல்முருகன் முன் நடந்தது. தொழிலாளிக்கு வாழ்நாள் சிறையும், ரூ.4,100 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement