ரயில் பெண் பயணியர் பாதுகாப்பு குழு விழிப்புணர்வு

தாம்பரம், தாம்பரம் ரயில் நிலையத்தில், பெண் பயணியர் பாதுகாப்பு குழு தொடர்பான விழிப்புணர்வு, நேற்று நடந்தது.

ரயில்வே காவல் துறை கண்காணிப்பாளர் ஈஸ்வரன் பங்கேற்று, பெண் பயணியர் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைகளை வழங்கினார்.

தொடர்ந்து, ரயில் பயணத்தின் போது உடைமைகளை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும். அறிமுகம் இல்லாத நபர்கள் தரும் குளிர்பானங்களையோ, தின்பண்டங்களையோ சாப்பிடக் கூடாது.

நகைகளை அணிந்துகொண்டு, ஜன்னல் ஓரத்தில் அமரவோ, துாங்கவோ கூடாது. பயணத்தின் போது சந்தேகப்படும்படியான நபர்களை கண்டால், இலவச எண்ணிற்கு தொடர்பு கொள்ள வேண்டும் என, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கல்லுாரி மாணவியர், ரயில் பயணியர் என, நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Advertisement