கத்தியுடன் சுற்றி திரிந்த ரவுடிகள் கைது

கொடுங்கையூர்,
கொடுங்கையூர், எருக்கஞ்சேரியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், மர்ம நபர்கள் கத்தியுடன் சுற்றித் திரிவதாக, கொடுங்கையூர் போலீசாருக்கு, நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீசார் ஆய்வு மேற்கொண்டு, சம்பவத்தில் ஈடுபட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய வியாசர்பாடி, பி.வி., காலனியை சேர்ந்த கிஷோர்குமார், 25, எருக்கஞ்சேரி, நேரு நகரை சேர்ந்த லிங்கபெருமாள், 24, கொடுங்கையூர், முத்தமிழ் நகரை சேர்ந்த முகமது அலி, 36, எருக்கஞ்சேரியை சேர்ந்த பாலாஜி, 20, ஹரிகரன், 24, ஆகிய ஐந்து ரவுடிகளை கைது செய்தனர்.

Advertisement