லாரி சக்கரத்தில் சிக்கி தனியார் ஊழியர் பலி
மணலி, மீஞ்சூரைச் சேர்ந்தவர் சந்திரசேகர், 51. இவர், 'ஆச்சி மசாலா' நிறுவனத்தில், தண்டையார்பேட்டை பகுதி மார்க்கெட்டிங் பிரிவு ஊழியராக பணிபுரிந்தார்.
நேற்று மாலை, தன் 'ஹோண்டா ஆக்டிவா' ஸ்கூட்டரில் பொன்னேரி நெடுஞ்சாலையில், ஈச்சங்குழி - விச்சூர் சந்திப்பில் சென்றுக் கொண்டிருந்தார்.
அப்போது, முன்புறமாக சென்ற மற்றொரு இருசக்கர வாகன ஓட்டி, திடீரென 'பிரேக்' பிடித்துள்ளார். இதை எதிர்பாராத சந்திரசேகர், நிலை தடுமாறி பக்கவாட்டில் விழுந்துள்ளார்.
கண்ணிமைக்கும் நேரத்தில், அவருக்கு பின்னால் வந்த லாரி அவர் மீது ஏறி இறங்கியதில் சக்கரத்தில் சிக்கி, தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சந்திரசேகரின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
லாரி ஓட்டுனரான மேல்மருவத்துாரைச் சேர்ந்த சையத் ஷபி, 24, என்பவரை, கைது செய்து விசாரிக்கின்றனர்.
மேலும்
-
உலகமயமாதல் சகாப்தம் நிறைவு; அறிவிக்கிறார் பிரிட்டன் பிரதமர்
-
கர்நாடகாவில் கார் கூரை, கதவில் தொற்றியபடி ஆபத்தான பயணம்: 7 பேர் மீது வழக்குப்பதிவு
-
ஒடிசா மணற்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக்கிற்கு சர்வதேச விருது
-
7000 கிராமங்களில் விதவைகளுக்கு விடிவுகாலம்: மஹாராஷ்டிராவில் ஏற்பட்ட சமூக மாற்றம்
-
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தேனா? சீமான் விளக்கம்
-
மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக எம்.ஏ.பேபி தேர்வு