அம்பத்துாரின் பிரபல கடையில் தீ பல கோடி ரூபாய் பொருட்கள் நாசம்

அம்பத்தூர், அம்பத்துார் ஓ.டி., பேருந்து நிலையம் அருகே, சி.டி.எச்., சாலையில், 'வசந்த் அண்ட் கோ' வீட்டு உபயோகம், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனையகம் உள்ளது.
இதன் மூன்றாவது மாடியில் உள்ள கிடங்கில் இருந்து, நேற்று காலை 10:00 மணிக்கு கரும்புகை வந்துள்ளது. இதையடுத்து, அங்கிருந்த எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தீப்பற்றி எரிந்ததால், விற்பனையகத்தில் இருந்து ஊழியர்கள் அவசர அவசரமாக வெளியேறினர்.
இதுகுறித்து, அம்பத்துார் தொழிற்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
ஆவடி, ஜெ.ஜெ.நகர், வில்லிவாக்கம் மற்றும் கோயம்பேடு தீயணைப்பு நிலையத்தில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்தனர். தவிர, 10க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகளும் வரவழைக்கப்பட்டன.
தீயணைப்பு வீரர்கள், ஆக்சிஜன் சிலிண்டருடன், விற்பனையகத்திற்குள் சென்று, மூன்றரை மணி நேர போராட்டத்திற்கு பின், மதியம் 1:00 மணியளவில் தீயை அணைத்தனர்.
இதற்கிடையே, அப்பகுதியில் கூடிய கூட்டத்தால், சி.டி.எச்., சாலை, ஆவடியில் இருந்து அம்பத்துார் செல்லும் மார்க்கத்தில், 2 கி.மீ., துாரத்திற்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதை சீர்செய்யும் செய்யும் பணியில், அம்பத்துார் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர்.
விற்பனையக கிடங்கில் இருந்த விலை உயர்ந்த, 'டிவி, ப்ரிஜ், ஏசி, ஜெனரேட்டர்' உள்ளிட்ட மின் சாதன பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின.
மின்கசிவு காரணமாக தீ விபத்து நடந்திருக்கலாம். இதனால் விற்பனையக கிடங்கில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டு உபயோக, மின் சாதன பொருட்கள் தீக்கிரையானதாக, போலீசார் தெரிவித்தனர்.
மேலும்
-
கர்நாடகாவில் கார் கூரை, கதவில் தொற்றியபடி ஆபத்தான பயணம்: 7 பேர் மீது வழக்குப்பதிவு
-
ஒடிசா மணற்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக்கிற்கு சர்வதேச விருது
-
7000 கிராமங்களில் விதவைகளுக்கு விடிவுகாலம்: மஹாராஷ்டிராவில் ஏற்பட்ட சமூக மாற்றம்
-
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தேனா? சீமான் விளக்கம்
-
மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக எம்.ஏ.பேபி தேர்வு
-
தமிழகத்திற்கு அதிக நிதி கொடுத்தும் சிலர் அழுகின்றனர்: பிரதமர் மோடி