ஆவின் சார்பில் மகளிருக்கான மருத்துவ முகாம்

சென்னை,ஆவின் சார்பில், ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனை, சென்னை ரோட்டரி கிளப் உதவியுடன், மகளிருக்கான மருத்துவ பரிசோதனை முகாம், விருகம்பாக்கத்தில் உள்ள அதிநவீன ஆவின் பாலகத்தில், நேற்று நடந்தது.

இந்த முகாமில், மார்பக புற்று நோய், கருப்பை வாய் பரிசோதனை மற்றும் பல் பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

இதில், 12 பேர் கொண்ட டாக்டர் குழுவினர், 50க்கும் மேற்பட்ட மகளிருக்கு பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

இதன் முடிவுகள், 10 நாட்களில் தெரிவிக்கப்படும் எனவும், இந்த பரிசோதனைகளை தனியாரில் பெற, 5,000 ரூபாய் வரை செலவாகும் எனவும், டாக்டர்கள் கூறினர்.

இதில், ஆவின் உயர் அதிகாரிகள், தியாகராஜன், சித்ரா மற்றும் சமூக சேவையில் ஈடுபட்டுள்ள பெண்கள் பங்கேற்றனர்.

Advertisement