கூடுதல் வரி விதிப்பு எதிரொலி: அமெரிக்காவுக்கு ஏற்றுமதியை நிறுத்திய ஜாகுவார்!

வாஷிங்டன்: அதிபர் டிரம்பின் 25 சதவீத வரி விதிப்பைத் தொடர்ந்து, அமெரிக்காவுக்கு கார்கள் ஏற்றுமதியை நிறுத்துவதாக ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் அறிவித்தது.
அமெரிக்க அதிபராக கடந்த ஜன., 20ல் பதவியேற்ற குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப், அமெரிக்காவுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக, அமெரிக்கப் பொருட்களுக்கு உலக நாடுகள் விதிக்கும் அதே அளவு வரியை, அந்த நாடுகளுக்கு விதிக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்தார்.
ஏப்., 2 முதல், இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். இதற்கிடையே, வெளிநாட்டு தயாரிப்பு ஆட்டோமொபைல் இறக்குமதி மீது, 25 சதவீத வரி விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தார். அதிபர் டிரம்பின் 25 சதவீத வரி விதிப்பைத் தொடர்ந்து, அமெரிக்காவுக்கு கார்கள் ஏற்றுமதியை நிறுத்துவதாக ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் அறிவித்தது.
ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் ஆடம்பர வாகனங்கள் மற்றும் எஸ்.யூ.வி., களை உற்பத்தி செய்கிறது. இந்த நிறுவனத்தின் தலைமையகம் பிரிட்டனின் கோவென்ட்ரியில் உள்ள விட்லியில் உள்ளது. கடந்த ஆண்டில் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம், கிட்டத்தட்ட கால் பங்கு வட அமெரிக்காவில் தான் விற்பனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.







மேலும்
-
பள்ளியில் பெயர்ந்து விழும் கூரை சித்திரெட்டிபட்டியில் மாணவர்கள் அச்சம்
-
துா ய்மையான அன்பினால் இறைவனை அடையலாம் சுவாமி தத்துவாத்மானந்தா அறிவுரை
-
66 வயதில் மளமள வென மலை ஏறிய முன்னாள் என்.சி.சி., மாணவி
-
குப்பை வாகனம் ஓட்டும் கிராம பஞ்சாயத்து தலைவி
-
சுந்தரகாண்டத்தை பாராயணம் செய்தால் சங்கடங்கள் விலகும் ஆன்மிகப் பேச்சாளர் நாகை முகுந்தன் யோசனை
-
திருநங்கைகளுக்கு பயிற்சி முகாம்