பைக்கில் மதுபாட்டில் கடத்தியவர் கைது
நெல்லிக்குப்பம் : புதுச்சேரியில் இருந்து மது பாட்டில்கள் கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போலீசார் நேற்றிரவு மேல்பட்டாம்பாக்கம் சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக பைக்கில் சந்தேகபடும்படி வந்தவரை நிறுத்தி சோதனை செய்தனர்.
இதில், புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரிந்தது.
விசாரணையில் பண்ருட்டி அடுத்த மாளிகம்பட்டை சேர்ந்த பத்மநாபன்,46; என்பது தெரிந்தது. உடன், போலீசார், வழக்குப் பதிந்து அவரை கைது செய்து, 40 மது பாட்டில்கள், பைக்கை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பலவித நோய்களுக்கு பாதுகாப்பான தீர்வளிக்கும் ஹோமியோபதி
-
அங்கன்வாடி உதவியாளர் பணியிடத்துக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
24 மணி நேர சேவையில் ஸ்ரீ அபிஷேக் மருத்துவமனை
-
'தினமலர்' வழிகாட்டி நிறைவு! மாணவர், பெற்றோர் ஆர்வப்பெருக்கு; 'உயர்கல்வி வசமாகும்' என நம்பிக்கை
-
ப்ளூடூத் போட்டு வாகனம் ஓட்டுபவர்கள் அதிகரிப்பு; விபத்துகளை தவிர்க்க தேவை கடும் நடவடிக்கை
-
ஜிப்லி படங்கள் பதிவிடுகிறார்களா.. ரவுடிகள் கண்காணிப்பு! சமூகவலைதளங்களில் போலீசார் கவனம்
Advertisement
Advertisement