கபாலீஸ்வரர், மருந்தீஸ்வரர் கோவில்களில் அதிகார நந்தி வாகனத்தில் எழுந்தருளிய உற்சவர்
சென்னை, மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவில் பங்குனி பெருவிழாவின் மூன்றாம் நாளான நேற்று, அதிகார நந்தி சேவை நடந்தது. காலை 6:00 மணிக்கு, அதிகார நந்தி வாகனத்தில், அம்பாளுடன் எழுந்தருளிய உற்சவர் கபாலீஸ்வரர், கோபுர தரிசனம் தந்தார்.
பின், மாட வீதிகளை வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அவருடன் கந்தருவி, கந்தருவன் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. இவ்விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
நேற்று இரவு பூதகி, வெள்ளி பூத வாகனம், தாரகாசுர வாகனம் ஆகியவற்றின் புறப்பாடு நடந்தது.
மருந்தீஸ்வரர் கோவிலில்
திருவான்மியூர், மருந்தீஸ்வரர் கோவில் பங்குனி பெருவிழாவின் மூன்றாம் நாளான நேற்று, காலை 6:00 மணிக்கு உற்சவர் சந்திரசேகரர், அதிகார நந்தி வாகனத்தில் சூரிய பகவானுக்கு காட்சியருளல் நிகழ்ச்சி நடந்தது.
பின், மாட வீதிகளை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
நேற்று இரவு 8:30 மணிக்கு, சந்திரசேகரர் பூத வாகனத்தில் சந்திரனுக்கு காட்சியருளல் நிகழ்ச்சி நடந்தது. இரவு 10:00 மணிக்கு தியாகராஜர் மூன்றாம் திருபவனி, பார்த்தசாரதிக்கு அருளல் நிகழ்ச்சி நடந்தது.
அதிகார நந்தி என்பது சிவாலயங்களில் காணப்படும் ஐந்து வகை நந்திகளில், மூன்றாவதாக இருப்பது. கைலாயத்தில் வாயிற்காவலாக நின்றிருக்கும் நந்திக்கு, சிவனை தரிசிப்பவர்களுக்கு அனுமதிக்கும் அதிகாரம் கொண்டவராக இருப்பதால், அதிகார நந்தி என பெயர் வந்தது.
மேலும்
-
உலகமயமாதல் சகாப்தம் நிறைவு; அறிவிக்கிறார் பிரிட்டன் பிரதமர்
-
கர்நாடகாவில் கார் கூரை, கதவில் தொற்றியபடி ஆபத்தான பயணம்: 7 பேர் மீது வழக்குப்பதிவு
-
ஒடிசா மணற்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக்கிற்கு சர்வதேச விருது
-
7000 கிராமங்களில் விதவைகளுக்கு விடிவுகாலம்: மஹாராஷ்டிராவில் ஏற்பட்ட சமூக மாற்றம்
-
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தேனா? சீமான் விளக்கம்
-
மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக எம்.ஏ.பேபி தேர்வு