திட்டமிடாமல் கட்டப்பட்ட மூடுகால்வாய் கவுல்பஜாரில் குடியிருப்பை சூழும் கழிவுநீர்

பம்மல், பம்மல் ஸ்டேட் பாங்க் காலனி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வெளியேறும் மழைநீர், ஆண்டாள் நகர், மூவர் நகர், கவுல்பஜார் ஊராட்சி குடியிருப்பு வழியாக வெளியேறி, அடையாறு ஆற்றில் கலக்கிறது.
இப்பகுதியில் வெள்ளம் தேங்குவதால், கால்வாய் கட்டி, அடையாறு ஆற்றுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.
முதல் கட்டமாக, பம்மல் ஸ்டேட் பாங்க் காலனியில் இருந்து, ஆண்டாள் நகர் வழியாக மூவர் நகர் வரை, 2,000 அடி துாரத்திற்கு, 3 கோடி ரூபாயில் மூடுகால்வாய் கட்டப்பட்டு உள்ளது.
இரண்டாம் கட்டமாக, மூவர் நகர் முதல் அடையாறு ஆறு வரை, 3,000 அடி துாரத்திற்கு, 4.15 கோடி ரூபாயில் மூடுகால்வாய் கட்டப்பட்டுள்ளது.
முறையாக திட்டமிடாமல் கட்டியதால், பொழிச்சலுாரில் இருந்து வரும் கழிவுநீர், அடையாறு ஆற்றுக்கு செல்லாமல், கவுல்பஜார் ஊராட்சி தனியார் இடத்தில், ஏரி போல் தேங்கியுள்ளது.
நெடுஞ்சாலைத் துறையினரின் அலட்சியத்தால், காலி மனைகள் ஏரி போல் மாறி, மெல்ல மெல்ல குடியிருப்புகளைச் சூழ்கிறது.
இப்பிரச்னை தொடர்பாக, அமைச்சர் அன்பரசன் கவனத்திற்கு பல முறை எடுத்து செல்லப்பட்டது. அப்படியிருந்தும் தீர்வு காணப்படவில்லை.
எனவே, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்து, கழிவுநீர் ஊருக்குள் செல்லாமல், கால்வாய் வழியாக அடையாறு ஆற்றுக்கு செல்ல வழிவகை செய்ய வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
வேளாங்கண்ணி பப்ளிக் பள்ளியில்மழலையர் பட்டமளிப்பு விழா
-
தமிழக லோக் ஆயுக்தாநீதிபதிக்கு பாராட்டு
-
வடசேரி பாம்பலம்மன் கோவில்கும்பாபிஷேக விழா கோலாகலம்
-
குளித்தலையில் பா.ஜ., ஸ்தாபன தினம்உறுப்பினர்களுக்கான கருத்தரங்கம்
-
செடல் மாரியம்மன் கோவில்திருவிழா; பக்தர்கள் தரிசனம்
-
சாலை நடுவே 'மேன்ஹோல்' மூடி சேதம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்