நடவடிக்கை எடுக்காத நலத்துறை மாற்றுத்திறனாளிகள் போராட்டம் அறிவிப்பு
சென்னை, கோரிக்கைகளுக்கு நலத்துறை நடவடிக்கை எடுக்காததால், வரும் 9ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, உயரம் குறைந்த மாற்றுத் திறனாளிகள் அறிவித்துள்ளனர்.
அச்சங்கத்தின் மாநில தலைவர் ராகுல், மாநில செயலர் கீதா கூறியதாவது:
மற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்குவது போல் மூன்று சக்கர வாகனம் வழங்க வேண்டும். வேலைவாய்ப்பில், அரசு வழங்கும் வீடு திட்டங்களில் முன்னுரிமை, அனைத்து நகர பேருந்துகளில் அடையாள அட்டையை காண்பித்து, இலவசமாக பயணம் செய்ய சிறப்பு அரசாணை என்பது உள்ளிட்டவை எங்கள் கோரிக்கைகள்.
இதை நிறைவேற்றக்கோரி, கடந்த நான்கு ஆண்டுகளாக மாற்றுத் திறனாளி நலத்துறை செயலர், கமிஷனர் மற்றும் இயக்குனருடன் பலமுறை கலந்துரையாடல்களை மேற்கொண்டும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தீர்வும் கிடைக்கவில்லை.
கடந்த ஓராண்டிற்கு முன், வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் போராட்டம் நடத்தினோம். அதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை, வரும் 9ம் தேதி காலை 10:00 மணி முதல் தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
உலகமயமாதல் சகாப்தம் நிறைவு; அறிவிக்கிறார் பிரிட்டன் பிரதமர்
-
கர்நாடகாவில் கார் கூரை, கதவில் தொற்றியபடி ஆபத்தான பயணம்: 7 பேர் மீது வழக்குப்பதிவு
-
ஒடிசா மணற்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக்கிற்கு சர்வதேச விருது
-
7000 கிராமங்களில் விதவைகளுக்கு விடிவுகாலம்: மஹாராஷ்டிராவில் ஏற்பட்ட சமூக மாற்றம்
-
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தேனா? சீமான் விளக்கம்
-
மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக எம்.ஏ.பேபி தேர்வு