விதிமீறி கட்டிய வணிக வளாகம் இடித்து அகற்றும் பணி துவக்கம்

சென்னை, தி.நகர், பாண்டிபஜார் பகுதியில் கட்டப்பட்ட, 10 மாடி வணிக வளாகத்தில், அனுமதியின்றி கட்டப்பட்ட ஆறு மாடிகளை, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் இடித்து அகற்றுகின்றனர்.
தி.நகர், பாண்டி பஜார், சர் தியாகராய சாலையில், 'ஜனபிரியா பில்டர்ஸ்' நிறுவனம் சார்பில், 10 மாடி வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. இதில், முதல் மூன்று தளங்களுக்கு மட்டுமே அனுமதி பெறப்பட்டுள்ளது.
நான்கில் இருந்து, 10வது மாடி வரை, விதிமீறி கட்டப்பட்டு உள்ளது. இதுகுறித்து, சி.எம்.டி.ஏ., அதிகாரிகளுக்கு புகார் வந்தது.
ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், கட்டடத்தின் உரிமையாளருக்கு 'நோட்டீஸ்' வழங்கினர். அதற்கு உரிய பதில் எதுவும் கிடைக்காத நிலையில், விதிமீறி கட்டப்பட்ட பகுதிகளுக்கு, 2019ம் ஆண்டு, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.
இதை எதிர்த்து, கட்டட உரிமையாளர், கடந்த ஆண்டு உயர் நீதிமன்றத்தை அணுகினார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சம்பந்தப்பட்ட கட்டடத்தின் நான்காவது மாடியில் இருந்து, 10வது மாடி வரை, விதிமீறி கட்டப்பட்ட பகுதிகள், பக்கவாட்டில் கட்டப்பட்ட கடைகள் ஆகியவற்றை இடிக்க, பிப்., 10ல் சி.எம்.டி.ஏ.,வுக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து, கட்டட உரிமையாளர்களுக்கும், அதில் கடைகள் வைத்திருப்போருக்கும் மீண்டும் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
அனைவரும் காலி செய்த நிலையில், சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் நேற்று, மாநகராட்சியுடன் இணைந்து, விதிமீறி கட்டிய பகுதிகளை இடித்து அகற்றும் பணியை துவங்கி உள்ளனர்.
அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

மேலும்
-
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தேனா? சீமான் விளக்கம்
-
மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக எம்.ஏ.பேபி தேர்வு
-
தமிழகத்திற்கு அதிக நிதி கொடுத்தும் சிலர் அழுகின்றனர்: பிரதமர் மோடி
-
உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி; 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
-
ராமநாதசுவாமி கோவிலில் பிரதமர் மோடி தரிசனம்
-
ராமர் பாலத்தை தரிசித்து ஆசி பெற்றேன்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி