ராமர் பாலத்தை தரிசித்து ஆசி பெற்றேன்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி

ராமேஸ்வரம்: '' இலங்கையில் இருந்து திரும்பும் வழியில் ராமர் பாலத்தை தரிசிக்கும் ஆசி கிடைத்தது,'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இலங்கை சென்ற பிரதமர் மோடி, அங்கு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் வந்தடைந்தார். ஹெலிகாப்டரில் வரும் போது ராமர் பாலத்தை தரிசனம் செய்ததாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டுள்ள அவர், அத்துடன் பதிவில் கூறியுள்ளதாவது: இலங்கையில் இருந்து திரும்பும் வழியில் ராமர் பாலத்தை ஹெலிகாப்டரில் இருந்து தரிசனம் செய்யும் ஆசி கிடைத்தது. அயோத்தியில் சூரிய திலகம் நடந்த அதே வேலையில் தற்செயலாக ராமர் பாலத்தை தரிசித்தேன்.
இரு தரிசனத்தையும் பெறுவது பாக்கியம். நம் அனைவரையும் ஒன்றிணைக்கும் சக்தியாக கடவுள் ஸ்ரீராமர் உள்ளார். அவரது ஆசிர்வாதம் எப்போதும் நம் மீது நிலைத்து இருக்கட்டும். இவ்வாறு அந்த பதிவில் மோடி கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (3)
பாரத புதல்வன் தமிழக குன்றியம் - ,
06 ஏப்,2025 - 20:14 Report Abuse

0
0
Reply
RAMESH KUMAR R V - ,இந்தியா
06 ஏப்,2025 - 17:12 Report Abuse

0
0
Reply
Venkatesan - ,
06 ஏப்,2025 - 13:38 Report Abuse

0
0
Reply
மேலும்
-
கடும் எதிர்ப்பு காணாமல் போச்சு; புதிய சட்டத்தில் வக்ப் வாரியம் அமைக்கிறது கேரளா!
-
சட்டசபையில் இருந்து அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வெளியேற்றம்; இன்று ஒரு நாள் சஸ்பெண்ட்
-
'ஆரூரா... தியாகேசா' கோஷங்கள் முழங்க திருவாரூர் ஆழி தேரோட்டம் கோலாகலம்
-
கனடா பார்லிமென்ட் தேர்தலில் இந்தியருடன் மோதும் பாகிஸ்தானியர்!
-
காயம் அடைந்த பாகிஸ்தான் மீனவருக்கு உதவிய இந்திய கடற்படை; நெகிழ்ச்சி சம்பவம்!
-
பங்குச் சந்தைகள் சரிவு; முதலீட்டாளர்களுக்கு ரூ.7 லட்சம் கோடி இழப்பு
Advertisement
Advertisement