உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி; 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

1

சென்னை: 'தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது' என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.


@1brஇது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அடுத்த 48 மணி நேரத்தில் தென் வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும்.


நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று (ஏப்ரல் 06) ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.



இன்று (ஏப்ரல் 06) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement