டாஸ்மாக் பாரில் தீ விபத்து

சென்னை, வளசரவாக்கம், ஸ்ரீதேவிகுப்பம் பிரதான சாலையில், அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இதன் அருகில் தனியாருக்கு சொந்தமான 'ஏசி' பார் உள்ளது.

நேற்று காலை, திடீரென 'ஏசி' பாரில் தீ விபத்து ஏற்பட்டது. அவற்றை ஊழியர்கள் அணைக்க முயன்றும் முடியவில்லை. பின், தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் அறிந்து வந்த மதுரவாயல், விருகம்பாக்கம் தீயணைப்பு படையினர், தீயை அடுத்தடுத்து பரவ விடமால் அணைத்தனர்.

இந்த தீ விபத்தில், மின்சாதன பொருட்கள், பிளாஸ்டிக் நாற்காலிகள், மேஜைகள் தீயில் எரிந்து நாசமாகின. தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து, வளசரவாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement