சிறுமியை திருமணம் வாலிபருக்கு 'காப்பு'
திருத்தணி, ஆர்.கே.பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட 17 வயது சிறுமியை, வங்கனுாரைச் சேர்ந்த, தனியார் ஊழியரான தனபால், 39, என்பவர், நேற்று திருமணம் செய்து கொண்டார்.
ஆர்.கே.பேட்டை அடுத்த ஜி.சி.எஸ்.கண்டிகையில் உள்ள சக்தியம்மன் கோவிலில் நடந்த இந்த திருமணம் குறித்து, திருத்தணி அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் சென்றது.
இதையடுத்து அங்கு வந்த போலீசார், சிறுமி மற்றும் அவரை திருமணம் செய்த தனியார் ஊழியரை, காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தனர்.
சிறுமியின் பெற்றோர், தனபால் மீது புகார் அளித்தனர். போலீசார் தனபாலை கைது செய்து விசாரிக்கின்றனர். சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
கடந்த 2022 - 2024ம் ஆண்டுகளில் வங்கனுார் அரசு மேல்நிலைப் பள்ளியில், அறிவியல் பாடத்திற்கான தற்காலிக ஆசிரியராக, தனபால் பணியாற்றினார்.
அப்போது அவரும், 10ம் வகுப்பு படித்து வந்த, தற்போது திருமணம் செய்துள்ள மாணவியும் காதலித்தது, போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
மேலும்
-
கர்நாடகாவில் கார் கூரை, கதவில் தொற்றியபடி ஆபத்தான பயணம்: 7 பேர் மீது வழக்குப்பதிவு
-
ஒடிசா மணற்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக்கிற்கு சர்வதேச விருது
-
7000 கிராமங்களில் விதவைகளுக்கு விடிவுகாலம்: மஹாராஷ்டிராவில் ஏற்பட்ட சமூக மாற்றம்
-
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தேனா? சீமான் விளக்கம்
-
மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக எம்.ஏ.பேபி தேர்வு
-
தமிழகத்திற்கு அதிக நிதி கொடுத்தும் சிலர் அழுகின்றனர்: பிரதமர் மோடி