போதையில் இருக்கிறாரா?: அரசு பஸ் ஓட்டுநர்களிடம் இனி தினமும் பரிசோதனை

சென்னை:பஸ் ஓட்டுநர், நடத்துநர் மது போதையில் இருக்கின்றனரா என்பதை கண்டறியும் சோதனை, போக்குவரத்து கழகங்களில் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகம் முழுதும், 20,000க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பெரும்பாலான ஓட்டுநர், நடத்துநர் கவனத்துடன், பஸ்களை பாதுகாப்பாக இயக்கி வருகின்றனர். பயணியரின் நன்மதிப்பையும் பெற்று வருகின்றனர்.
ஒரு சிலர் மது போதையில் பணிக்கு வர முயற்சிப்பதால், போக்குவரத்து கழகங்களுக்கு அவப்பெயர் ஏற்படுகிறது. குறிப்பாக, இரவு நேரங்களில் சில ஊழியர்கள் மது போதையில் இருப்பதாக, பயணியர் புகார் தெரிவித்துள்ளனர்.
இது, பயணியர் பாதுகாப்பு பிரச்னை என்பதால், தமிழகம் முழுதும் உள்ள போக்குவரத்து கழகங்களுக்கு, 1.79 கோடி ரூபாய் செலவில், ரத்தத்தில் உள்ள ஆல்கஹால் அளவை மதிப்பிடும் கருவிகள் வாங்கப்பட்டு உள்ளன.
இந்தக் கருவியில், சோதனைக்கு உட்படுத்தப்படும் ஓட்டுநர் பெயர் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் காகித வடிவில் பெற முடியும்.
இக்கருவியை பயன்படுத்தி, தினமும் பணிக்கு வரும் ஓட்டுநர், நடத்துநர்களிடம் சோதனை செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. மது குடித்திருப்பது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த திடீர் சோதனை வாயிலாக, பயணியர் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதோடு, மதுவால் ஏற்படும் விபத்து முற்றிலும் தவிர்க்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.











மேலும்
-
ஐ.எஸ்.எல்., கால்பந்து: பைனலில் பெங்களூரு
-
இந்தியா 76வது இடம்: கூடைப்பந்து தரவரிசையில்
-
மும்பை அணியில் பும்ரா
-
தங்கம் வென்றார் ஹிதேஷ்: உலக குத்துச்சண்டையில் வரலாறு
-
ஜப்பான் 'பார்முலா-1': வெர்ஸ்டாப்பன் 'சாம்பியன்'
-
இன்னும் நகராமல் அப்படியே இருக்கும் தேர்தல் வாக்குறுதி! முதல்வரிடம் கேள்வி எழுப்ப காத்திருக்கும் கோவை மக்கள்