3 மாதங்களில் காச நோயால் 19 பேர் பலி

ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில், 'காசநோய் இல்லா ஈரோடு' திட்டத்தில், மூன்று மாதங்களாக, அந்தந்த பகுதி அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் வாயிலாக, தினமும், காசநோய் விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை, மேற்கொண்டு வருகின்றனர்.

இதுபற்றி சுகாதாரத்துறையினர் கூறியதாவது :

காசநோய், நுரையீரல், மூளை, தண்டுவடத்தை தாக்கும். காசநோய் பாதிப்பை, நீண்ட நாள் இருமல், சளியில் ரத்தம் வருதல், மார்பு சளி, சுவாச பாதிப்பு, எடை இழப்பு, பசியின்மை, இரவு நேரத்தில் வியர்வை, காய்ச்சல், உடல் வலி போன்ற பல்வேறு அறிகுறிகளில் அறியலாம். அந்த அறிகுறிகள் உள்ளவர்கள், அரசுமருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில், சளி பரிசோதனை செய்தும், நெஞ்சக ஊடுகதிர் பரிசோதனையிலும் கண்டறியலாம். இதுவரை, 19,600 பேருக்கு, சளி பரிசோதனை செய்யப்பட்டது. சிகிச்சை மூலம் இதுவரை, 877 பேர் குணமடைந்துள்ளனர். 19 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். கடந்தாண்டுகளைவிட, இறப்பு விகிதம் குறைந்துள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement