அங்கன்வாடியில் 127 காலி பணியிடம் வரும் 23க்குள் விண்ணப்பம் வரவேற்பு

நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்ட அறிக்கை:
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகளின் கீழ், நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள, 127 அங்கன்வாடி பணியாளர்கள், ஐந்து குறு அங்கன்-வாடி பணியாளர்கள், 12 அங்கன்வாடி உதவியாளர் பணியி-டங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன.
நாமக்கல் மாவட்டத்தில், வட்டாரம் வாரியாக நேரடி நியமனம் செய்யப்படவுள்ள அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர், அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களின் எண்-ணிக்கை மற்றும் இனசுழற்சி விபரம், மாவட்ட திட்ட அலுவல-கத்திலும், அந்தந்த வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவல-கங்களிலும், தகவல் பலகையில் ஒட்டப்படும்.
விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வரும், 23 மாலை, 5:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்யப்படும் அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர், அங்கன்வாடி உதவி-யாளர், தொடர்ந்து, 12 மாதம் பணியை முடித்தபின், சிறப்பு கால-முறை ஊதியத்தின் கீழ் ஊதியம் பெறுவர். பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
தமிழ் சரளமாக எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும். அங்கன்-வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர்கள், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது, 25 முதல், 35க்குள் இருக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்ற பெண்கள், எஸ்.சி.,-எஸ்.டி., வகுப்பினர்,
40 வயதுக்குள் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள், 38 வயது வரை இருக்கலாம்.
அங்கன்வாடி உதவியாளர் பணிக்கு, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றி-ருக்க வேண்டும். வயது, 20 முதல், 40 வரை இருக்க வேண்டும்.
விதவைகள், ஆதரவற்ற பெண்கள், எஸ்.சி.,-எஸ்.டி., வகுப்-பினர், 45 வயதுக்குள் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள், 20 முதல், 43 வயது வரை இருக்கலாம். காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் போது உரிய விண்ணப்பத்தை பூர்த்திசெய்து, காலிப்பணியிட குழந்தை மையம் அமைந்துள்ள வட்டாரத்தில் உள்ள, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில்
மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன், மாற்று சான்றிதழ், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, ஜாதிச்சான்-றிதழ், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றின் சுய
சான்றொப்பமிட்ட நகல்கள் இணைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்
பட்டுள்ளது.

Advertisement