மெட்டாலா ஆஞ்சநேயர் கோவிலில் தீ மிதி விழா

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அடுத்த மெட்டாலா ஆஞ்ச நேயர் கோவிலில் நடந்த
தீ மிதி விழாவில், ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
நாமகிரிப்பேட்டை அடுத்த மெட்டாலா கணவாயில் வரலாற்று சிறப்பு மிக்க ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி மாதம் கடைசி வாரம் தீ மிதி விழா நடப்பது வழக்கம்.
ஆஞ்சநேயர் கோவிலில் தீ மிதி விழா இங்கு மட்டுமே நடக்கி-றது. இதனால், சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்-தர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டு ஆஞ்சநேயரை தரிசனம் செய்கின்றனர்.
இந்தாண்டு விழா, நேற்று முன்தினம் மாலை பந்தல் சேர்வை-யுடன் தொடங்கியது. நாமகிரிப்பேட்டை அரசு மருத்துவமனை அருகே அமைக்கப்பட்டுள்ள பந்தலில் உற்சவர் ஆஞ்சநேயர் பக்-தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று காலை, கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் ஆஞ்சநேயர் சுவாமியை, நாமகிரிப்பேட்டையில் இருந்து ஊர்வலமாக மெட்டாலா கொண்டு சென்றனர். எம்.பி., ராஜேஸ்குமார், டி.எஸ்.பி., விஜயகுமார், இன்ஸ்பெக்டர் அம்-பிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மதியம் சிறப்பு பூஜை, அபிஷேகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து, பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், மாலை கோவில் முன் பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.ஏற்பாடுகளை, ஹிந்து சமய அறநிலையத்துறையுடன் இணைந்து விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Advertisement