தியேட்டரில் அஜித் பட கட் அவுட் சரிந்து விழுந்தது

1

திருநெல்வேலி: திருநெல்வேலி வண்ணாரபேட்டையில் அஜித் படத்திற்காக வைக்கப்பட்ட கட் அவுட் சரிந்து விழுந்தது. யாருக்கும் காயம் இல்லை.

நடிகர் அஜித் நடிக்கும் 'குட் பேட் அக்லி' படம் ஏப்., 10ல் ரீலிஸாகிறது.

அவருடன் திரிஷா, பிரசன்னா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். திரைப்படத்திற்காக திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் உள்ள பி.எஸ்.எஸ் மல்டிப்ளக்ஸ் தியேட்டர் வளாகத்தில் கட் அவுட் அமைக்கும் பணி நேற்று நடந்தது.

அதனை ரசிகர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென கட் அவுட் சரிந்து விழுந்தது. இதனால் ரசிகர்கள் ஓட்டம் பிடித்தனர். இதில் யாருக்கும் காயம் இல்லை.

Advertisement