சமூக விரோதிகளின் கூடாரமாகும் அரசு கால்நடை மருத்துவமனை

பாப்பிரெட்டிப்பட்டி: கடத்துார் அருகே, புட்டிரெட்டிப்பட்டியில் கால்நடை மருத்துவமனை சமூக விரோதி-களின் கூடாரமாக மாறி வருகிறது.
தர்மபுரி மாவட்டம், கடத்துார் ஒன்றியம், புட்டிரெட்டிப்பட்டி ஊராட்சியில், கடத்துாரில் கால்நடை மருத்துவமனை உள்ளது. 25 ஆண்டுகளுக்கு மேலாக மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு புதுார், புட்டிரெட்டிப்பட்டி, தாளநத்தம், நத்தமேடு, மோட்டாங்குறிச்சி உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், தங்களது கால்நடைகளை சிகிச்சைக்காக கொண்டு வருகின்றனர். மருத்துவமனையில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால், விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், 'மருத்துவமனையில் கால்-நடைகளுக்கு நிழற்கூடம், தண்ணீர் வசதி இல்லை. டாக்டர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு வருவதில்லை. அரசின் வழிகாட்டு முறைகள் படி நடப்பதில்லை. மருத்துவமனை வளாகத்தில், இரவு நேரங்களில் குடிமகன்களின் தொல்லை அதிகமாக உள்ளது. சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளது. சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து பல ஆண்டுகளாகியும் புதுப்பிக்கவில்லை. மக்-களின் பார்வைக்கு பாழடைந்த பங்களா போல் கால்நடை மருத்து-வமனை உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் விரைந்து கால்-நடை மருத்துவமனையை புதுப்பித்து, அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்,'
என்றனர்.

Advertisement