ஒடிசாவிலிருந்து கஞ்சா கடத்திய வாலிபர் கைது

தேவகோட்டை : தேவகோட்டை டி.எஸ்.பி. கவுதம் தலைமையில் இன்ஸ்பெக்டர் சரவணன், எஸ்.ஐ. ஜெயபாலன் மற்றும் போலீசார் தச்சவயல் அருகே ராமேஸ்வரம் சென்ற பஸ்சில் சோதனையிட்டனர்.

பஸ்சில் இருந்த வாலிபர் ஒருவரிடம் விசாரித்ததில் முன்னுக்கு பின் முரணாக பேசினார்.

சந்தேகமடைந்த போலீசார் விசாரணையில் துாத்துக்குடி பாண்டியன் நகரைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் மகாராஜா. 38., என்றும், ஒடிசாவில் இருந்து ராமேஸ்வரத்தில் உள்ள ஒரு முகவரிக்கு கஞ்சா கொண்டு செல்வதாக தெரிவித்தார்.

அவரிடம் 11 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. போலீசார் மகாராஜாவை கைது செய்து அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Advertisement