நாய் குறுக்கே வந்ததால் அரசு பஸ் டிரைவர் பலி

தேவகோட்டை : காரைக்குடி பொன்நகரைச் சேர்ந்தவர் குப்புச்சாமி, 66. அரசு பஸ் டிரைவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

நேற்று முன்தினம் தேவகோட்டைக்கு வந்துவிட்டு தானுச்சாவூரணி ரோடு வழியாக காரைக்குடியில் உள்ள வீட்டிற்கு டூவீலரில் திரும்பினார். அப்போது நாய் குறுக்கே வந்ததில்டூவீலர் நிலை தடுமாறி குப்புச்சாமி கீழே விழுந்ததில் தலையில் காயமடைந்தார்.

மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார். ஆறாவயல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement