இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை

சுத்தகுண்டேபாளையா : அதிகாலையில் சாலையில் நடந்து சென்ற இளம்பெண்ணுக்கு, வாலிபர் பாலியல் தொல்லை கொடுக்கும் அதிர்ச்சி வீடியோ வெளியாகி உள்ளது.

பெங்களூரு சுத்தகுன்டேபாளையாவில் கடந்த 4 ம் தேதி அதிகாலை 1:55 மணிக்கு, இரண்டு இளம்பெண்கள் சாலையில் நடந்து செல்கின்றனர். அவர்களை வாலிபர் ஒருவர் பின்தொடர்கிறார். பயந்து போன இளம்பெண்கள் வேகமாக ஓடுகின்றனர். அவர்களை துரத்தும் வாலிபர், ஒரு இளம்பெண்ணை மட்டும் கட்டிபிடித்து பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு தப்பிக்கிறார். பாதிக்கப்பட்ட இளம்பெண், தோழியுடன் அங்கிருந்து செல்கிறார். இந்த சம்பவம் அங்கு பொருத்தப்பட்டு இருந்த, கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

அந்த வீடியோ சமூக வலைதளங்களில் நேற்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வீடியோ அடிப்படையில் சுத்தகுன்டேபாளையா போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement