பங்குச் சந்தைகள் சரிவு; முதலீட்டாளர்களுக்கு 19.4 லட்சம் கோடி ரூபாய் இழப்பு

12


புதுடில்லி: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த வரிவிதிப்பு காரணமாக இந்திய பங்குச் சந்தைகளில் பங்கு விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. முதலீட்டாளர்களுக்கு 19.4 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஏப்ரல் 2ம் தேதி பல்வேறு நாடுகளுக்கு பரஸ்பர வரி விதித்தார். இந்தியாவுக்கு 26 சதவீதம் வரி விதித்துள்ளார். அதிபர் டிரம்ப் அறிவித்த வரிவிதிப்பு காரணமாக இந்திய பங்குச் சந்தைகளில் பங்கு விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.


இன்று இந்தியப் பங்குச் சந்தை, 2600 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் துவங்கியது. இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி கடந்த வார வர்த்தகத்தில் 22,904.45 புள்ளிகளில் நிறைவடைந்தது. இன்று (ஏப்ரல் 07) காலை 800 புள்ளிகளில் சரிந்து, 22,075 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது.

பல்வேறு துறைகளில் விற்பனை காரணமாக இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் பலவீனமான நிலையில் முடிவடைந்தன. நிப்டி 22,200 க்கும் கீழே இருந்தது. முடிவில், சென்செக்ஸ் 2,226.79 புள்ளிகள் அல்லது 2.95 சதவீதம் குறைந்து 73,137.90 ஆகவும், நிப்டி 742.85 புள்ளிகள் அல்லது 3.24 சதவீதம் குறைந்து 22,161.60 ஆகவும் இருந்தது.



முதலீட்டாளர்களுக்கு 19.4 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertisement