மறைமலை நகரில் பா.ம.க., பொதுக்குழு கூட்டம்

மறைமலை நகர்:செங்கல்பட்டு மறைமலை நகர் நகர பா.ம.க., சார்பில் பொதுக்குழு கூட்டம் நகர செயலர்கள் அரிகிருஷ்ணன், தணிகாசலம் தலைமையில் நேற்று நடந்தது.

மறைமலை நகர் தெற்கு நகர தலைவர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பா.ம.க., மத்திய மாவட்ட செயலர் காயார் ஏழுமலை பங்கேற்று, மே மாதம் 11ம் தேதி நடைபெற உள்ள சித்திரை முழுநிலவு மாநாடு குறித்து ஆலோசனை வழங்கினார்.

மறைமலை நகர் தெற்கு நகர தலைவராக தேர்வு செய்யப்பட்ட தினேஷ்குமாருக்கு கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement