குடியிருப்பை சூழும் கழிவுநீரால் பம்மல் பகுதியினர் அவதி

பம்மல்:பம்மல் ஸ்டேட் பாங்க் காலனி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வெளியேறும் மழைநீர், ஆண்டாள் நகர், மூவர் நகர், கவுல்பஜார் ஊராட்சி குடியிருப்பு வழியாக வெளியேறி, அடையாறு ஆற்றில் கலக்கிறது.
இப்பகுதியில் வெள்ளம் தேங்குவதால், கால்வாய் கட்டி, அடையாறு ஆற்றுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.
முதற் கட்டமாக, பம்மல் ஸ்டேட் பாங்க் காலனியில் இருந்து, ஆண்டாள் நகர் வழியாக மூவர் நகர் வரை, 2,000 அடி துாரத்திற்கு, 3 கோடி ரூபாயில் மூடுகால்வாய் கட்டப்பட்டு உள்ளது.
இரண்டாம் கட்டமாக, மூவர் நகர் முதல் அடையாறு ஆறு வரை, 3,000 அடி துாரத்திற்கு, 4.15 கோடி ரூபாயில் மூடுகால்வாய் கட்டப்பட்டுள்ளது.
முறையாக திட்டமிடாமல் கட்டியதால், பொழிச்சலுாரில் இருந்து வரும் கழிவுநீர், அடையாறு ஆற்றுக்கு செல்லாமல், கவுல்பஜார் ஊராட்சி தனியார் இடத்தில், ஏரி போல் தேங்கியுள்ளது.
நெடுஞ்சாலைத் துறையினரின் அலட்சியத்தால், காலி மனைகள் ஏரி போல் மாறி, மெல்ல மெல்ல குடியிருப்புகளைச் சூழ்கிறது.
இப்பிரச்னை தொடர்பாக, அமைச்சர் அன்பரசன் கவனத்திற்கு பல முறை எடுத்து செல்லப்பட்டது. அப்படியிருந்தும் தீர்வு காணப்படவில்லை.
எனவே, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்து, கழிவுநீர் ஊருக்குள் செல்லாமல், கால்வாய் வழியாக அடையாறு ஆற்றுக்கு செல்ல வழிவகை செய்ய வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
கட்டுக்கட்டாக ஆவணங்கள் சிக்கின அமைச்சர் நேரு தம்பியிடம் விசாரணை
-
நாலுார் கம்மார்பாளையம் சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
-
ஏர்போர்ட்டில் ஹவாலா பணப்பரிமாற்றம்? கரன்சியை கச்சிதமாக கைமாற்றும் கும்பல்!
-
ஏரியில் மூழ்கி முதியவர் பலி
-
'விசாரணைக்கு சென்றவர் மர்ம மரணம் மீண்டும் பிரேத பரிசோதனை செய்யுங்கள்' உயர் நீதிமன்றம் உத்தரவு
-
வாகனங்களுக்கான கட்டுப்பாட்டை அமல்படுத்துவதில் என்ன சிக்கல்? நீலகிரி கலெக்டரிடம் ஐகோர்ட் அறிக்கை கேட்பு