2026ல் தி.மு.க., வெற்றி உறுதி: ஸ்டாலின்

1

கோவை,: ''வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., உறுதியாக வெற்றி பெறும்,'' என, கோவையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

கொங்குநாடு கலைக்குழுவை சேர்ந்த 16,000 பெண்கள், கடந்த ஆண்டு ஒரே இடத்தில் வள்ளி கும்மியாட்டம் ஆடி கின்னஸ் சாதனை புரிந்தனர். கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த பெண்களுக்கு, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில், நேற்று கோவை கொடிசியா மைதானத்தில் பாராட்டு விழா நடந்தது.

விழாவில், 10,000க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று வள்ளி கும்மியாட்டம் ஆடினர்.

விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் வள்ளி கும்மியாட்டத்தை பார்த்து ரசித்தார்.

முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், ''வரும் 2026ல் மீண்டும் தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்துக் கொண்டிருக்கிறது. தொகுதி மறுசீரமைப்பு குறித்து பிரதமர் மோடியிடம் எடுத்துக்கூற நேரம் கேட்டுள்ளோம்.

''வேண்டுமென்றே நம்மை தவிர்க்கின்றனர். தமிழகத்தை தவிர்ப்போருக்கு சரியான பதிலை தமிழக மக்கள் அளிக்க வேண்டும்,'' என்றார். பின்னர் வள்ளி கும்மி ஆட்டத்தில் கின்னஸ் சாதனை படைத்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.

Advertisement