'108' அவசரகால ஆம்புலன்ஸ் டிரைவர், உதவியாளர் பணிக்கு நாளை நேர்காணல்
நாமக்கல்: ஆம்புலன்சில் டிரைவர், மருத்துவ உதவியாளர் பணியிடத்துக்கு வரும், 8ல், நாமக்கல் - மோகனுார் சாலையில் அமைந்துள்ள பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் நேர்முகத் தேர்வு நடக்-கிறது.
காலை, 9:00 முதல், மாதியம், 2:00 மணி வரை நடக்கும் இம்மு-காமில், டிரைவருக்கான அடிப்படை தகுதிகள், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
நேர்முக தேர்வு அன்று, 24 முதல், 35 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆண், பெண் இரு பலரும் கலந்து கொள்ளலாம். உயரம், 162.5 செ.மீ., குறையாமல் இருக்க வேண்டும்.
இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் எடுத்து, குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளும், பேஜ் வாகன ஓட்டுனர் உரிமம் எடுத்து, குறைந்தபட்சம் ஓராண்டும் நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
மருத்துவ உதவியாளர்களுக்கான அடிப்படை தகுதிகள், பி.எஸ்சி., நர்சிங் அல்லது ஜி.என்.எம்., ஏ.என்.எம்.,-டி.எம்.எல்.டி., (பிளஸ் 2விற்கு பின் இரண்டு ஆண்-டுகள் படித்திருக்க வேண்டும்) அல்லது லைப் சயின்ஸ், பி.எஸ்சி., ஜூவாலஜி, பாட்டனி, பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோப-யாலஜி, பயோடெக்னாலஜி இவற்றில் ஏதேனும் ஒன்று முடித்தி-ருக்க வேண்டும்.
வயது வரம்பு, தேர்வு அன்று, 19-க்கு குறையாமலும், 30க்கு மிகா-மலும் இருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
போதை டிரைவர் ஓட்டிய கார் மோதி மூன்று பேர் பலி
-
புல்டோசருடன் ராமநவமி ஊர்வலம்; போலீஸ் அனுமதி மறுப்பால் மறியல்
-
ஆந்திர அரசுக்கு ஆலோசனை வழங்கும் சென்னை ஐ.ஐ.டி.,
-
விவசாய சங்க தலைவர் உட்பட மூவர் உ.பி.,யில் சுட்டுக்கொலை
-
தங்கக்கட்டி கொள்ளை வழக்கு: 5 தமிழர் கைது; ஒருவர் தற்கொலை
-
அமலுக்கு வந்தது வக்ப் திருத்த சட்டம்