முத்துக்குமாரசாமி கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா

நாமக்கல்: ப.வேலுார் தாலுகா, கோளாரம் கிராமம் அடுத்த கரிச்சிபாளை-யத்தில் செல்வ முத்துக்குமாரசாமி கோவில் அமைந்துள்ளது. இக்-கோவிலில், பிப்., 16ல் கும்பாபிஷகே விழா நடந்தது. அதை தொடந்து, 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடந்து வந்தது.
அதன் நிறைவு விழா, நேற்று நடந்தது. காலை கணபதி ஹோமத்-துடன் துவங்கி, சத்ரு சம்ஹார யாக விழா நடந்தது.


தொடர்ந்து, 10:00 மணிக்கு மகா அபிஷேகம், சிறப்பு அலங்-காரம் நடந்தது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம், அன்ன-தானம் வழங்கப்பட்டது.

Advertisement