படப்பை மேம்பால பணிகளை இம்மாதத்திற்குள் முடிக்க திட்டம்

படப்பை:வண்டலுார் - -வாலாஜாபாத் நெடுஞ்சாலை, படப்பை பஜார் பகுதியில் நெரிசலை குறைக்க, 26.64 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் அமைக்கும் பணி, கடந்த 2022, ஜனவரியில் துவங்கி மந்தகதியில் நடந்து வந்தது.

தற்போது, 80 சதவீதத்திற்கு மேல் பாலம் கட்டுமான பணி நிறைவுற்ற நிலையில், சாலையில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகளால் சாலை குறுகி, வழக்கத்தை விட இரு மடங்கு நெரிசல் அதிகரித்துள்ளது.

இதனால், வியாபாரிகள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வேதனைகுள்ளாகியுள்ளனர். பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து, நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'படப்பை மேம்பாலம் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 85 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன. எஞ்சியுள்ள பணிகளை இம்மாதம் இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம்' என்றார்.

Advertisement