வக்ப் சட்ட திருத்தம்: காங்., ஆர்ப்பாட்டம்

சேலம்: வக்ப் வாரிய சட்ட திருத்த மசோதாவை கண்டித்து, சேலம், கோட்டை மைதானத்தில் நேற்று, மாநகர் காங்., சார்பில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது.


மாநகர் தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார். அதில் லோக்ச-பாவில் வக்ப் சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றியதால், தமி-ழகம் வந்த மோடியை கண்டிப்பதாக கூறினர். ஜாமியா மஸ்ஜித் முத்தவல்லி அன்வர், மாநகர பொருளாளர் ராஜகணபதி, வர்த்தக பிரிவு தலைவர் சுப்ரமணியம், செயலர் குமரேசன், மண்டல குழு தலைவர்கள் சாந்தமூர்த்தி, நிஷார் உள்பட பலர் பங்கேற்றனர்.அதேபோல் சேலம் கிழக்கு மாவட்டம் சார்பில், ஆத்துார் பழைய பஸ் ஸ்டாண்ட் முன், மாவட்ட தலைவர் அர்த்தனாரி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆத்துார் நகர தலைவர் முருகேசன், மாவட்ட நிர்வாகி ஓசுமணி உள்பட பலர், கருப்பு கொடி ஏந்தி, கருப்பு நிற பலுான்களை பறக்க விட்டு, பிர-தமர், மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

Advertisement