தி.மு.க., மாணவரணி உறுப்பினர் சேர்க்கை

சேலம்: தி.மு.க.,வின், சேலம் மத்திய மாவட்ட மாணவரணி சார்பில் இல்லந்தோறும் மாணவர் அணி உறுப்பினர் சேர்க்கை தொடக்க விழா, கன்னங்குறிச்சியில் நேற்று நடந்தது. அமைச்சர் ராஜேந்-திரன், உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார்.

மாணவ-ரணி நிர்வாகிகள், வீடுதோறும் சென்று, 18 வயது நிரம்பியவர்-களை அடையாளம் கண்டு அழைத்து வந்து, உறுப்பினர் சேர்க்-கையில் தீவிரம் காட்டினர். அவர்களிடம் பெயர், வயது, படிப்பு, தொழில் உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் கேட்டு, உறுப்பினர் பதிவு நடந்தது. பின், சேலம் புது பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள கட்சி அலுவலகத்தில், மாணவரணி மாவட்ட நிர்வாகிகள் ஆய்வு கூட்டம் நடந்தது. அதில் மாநில மாணவரணி செயலர் ராஜீவ்காந்தி பேசினார்.

Advertisement