காத்தாடி, மாஞ்சா நுால் விற்ற இருவர் சிக்கினர்

கொடுங்கையூர்:கொடுங்கையூர், திருவள்ளூர் சாலையில், மாஞ்சா நுால், காத்தாடி விற்பனை செய்யப்படுவதாக, கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்தில், போலீசார் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். விசாரணையில், அப்பகுதியைச் சேர்ந்த ஞானபிரகாஷ், 40, என்பவர், உத்தர பிரதேசத்தில் இருந்து மாஞ்சா நுால், காத்தாடி வாங்கி வந்து விற்றது தெரிய வந்தது.
அவரை கைது செய்த போலீசார், 220 காத்தாடிகள், 15 லொட்டாய் மற்றும் மாஞ்சா நுால் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
அதேபோல், கொடுங்கையூர், அம்பேத்கர் தெருவில் உள்ள வீட்டில், காத்தாடி மற்றும் மதுபாட்டில்கள் கள்ளச் சந்தையில் விற்பதாக, கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் ஆய்வு மேற்கொண்டு, விற்பனையில் ஈடுபட்ட கொடுங்கையூர், அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த பிரகாஷ், 45, என்பவரை கைது செய்து, 200 மதுபாட்டில்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட காத்தாடிகளை பறிமுதல் செய்தனர்.
மேலும்
-
'கப்' அடித்தால் 'அலர்ட்' ; அதிக குப்பை சேர்ந்தால் எச்சரிக்கும் ஏ.ஐ., கேமரா; மதுரை நகரில் 80 இடங்களில் நிறுவப்படுகிறது
-
'ஊர்வலத்தில் பட்டாசு வெடித்தால் நடவடிக்கை'; குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
-
கள்ளழகர் கோயில் சித்திரைத்திருவிழா மே 8ல் துவக்கம்
-
இன்றைய நிகழ்ச்சிகள் /ஏப். 9 க்குரியது
-
காளியம்மன் கோயில் விழா
-
சிறுமிக்கு பாலியல் தொல்லை இருவர் போக்சோவில் கைது