கோடை காலத்தை முன்னிட்டு குளிர்பான நிறுவனங்களில் ஆய்வு
தர்மபுரி: கோடை காலத்தை முன்னிட்டு, காரிமங்கலம் அருகேயுள்ள குளிர்பானங்கள் மற்றும் ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனங்களில், உணவு பாதுகாப்பு துறையினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழகம் முழுவதும் உள்ள உள்ளூர் குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் அதனை வினியோகிக்கும் மொத்த விற்பனை நிலையங்களிலும் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க மாவட்ட நியமன அலுவலர்களுக்கு, மாநில உணவு பாது-காப்புத்துறை ஆணையர் உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்ப-டையில், தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் பானுசுஜாதா தலைமையில், காரிமங்கலம் மற்றும் அனுமந்தபுரம் பகுதிகளில் இயங்கி வரும் குளிர்பா-னங்கள், ஐஸ்கிரீம் தயாரிப்பு, வினியோகிக்கும் நிறுவனங்களில் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் உட்பட குழு-வினர் ஆய்வு செய்து, குளிர்பானங்கள் தரம் அறிய அதன் மாதி-ரிகளை சேகரித்து பகுப்பாய்வுக்கு அனுப்பினர்.
இதில், ஆய்வு முடிவுக்கு பின் குளிர்பானங்கள் தரம் குறைவாக இருந்தால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்-பதாக, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்
தெரிவித்தனர்.
மேலும்
-
போதை டிரைவர் ஓட்டிய கார் மோதி மூன்று பேர் பலி
-
புல்டோசருடன் ராமநவமி ஊர்வலம்; போலீஸ் அனுமதி மறுப்பால் மறியல்
-
ஆந்திர அரசுக்கு ஆலோசனை வழங்கும் சென்னை ஐ.ஐ.டி.,
-
விவசாய சங்க தலைவர் உட்பட மூவர் உ.பி.,யில் சுட்டுக்கொலை
-
தங்கக்கட்டி கொள்ளை வழக்கு: 5 தமிழர் கைது; ஒருவர் தற்கொலை
-
அமலுக்கு வந்தது வக்ப் திருத்த சட்டம்