இலவச கண் சிகிச்சை முகாம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் ரோட்டரி சங்கம், கோவை கண் சங்கர மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச்சங்கம் சார்பில், இலவச கண் சிகிச்சை முகாம் நேற்று நடந்தது. ரோட்டரி நூற்றாண்டு மண்டபத்தில் நடந்த முகாமில், தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். முகாமிற்கு நிதி அளித்து உதவிய சென்னை மயிலாப்பூர் சுக்ரா ஜூவல்லரி உரிமையாளர்கள் கல்கிராஜூ, புஷ்பலதா தம்பதியருக்கு மரியாதை செய்யப்பட்டது.

கோவை கண் சங்கரா டாக்டர் நிவேதா தலைமையிலான மருத்துவ பணியாளர்கள் கண் பரிசோதனை செய்தனர். முகாமில் 345 பேர் கலந்து கொண்டனர். இதில் அறுவை சிகிச்சைக்கு தேர்வான, 147 பேர் கோவை சங்கரா கண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ரோட்டரி செயலாளர் சிவக்குமார், முன்னாள் தலைவர்கள் பெருமாள், துவாரகா, ஞானராஜ், இம்மானுவேல் சசிகுமார், நிர்வாகிகள் சேகர், அரவிந்தன், ராஜா, பாலசுப்பிரமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பொருளாளர் பாபு நன்றி கூறினார்.

Advertisement