பங்குனி திருவிழா

திருப்புவனம் : திருப்புவனத்தில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு சுவாமி, அம்மன் வீதியுலா வந்தனர். புஷ்பவனேஷ்வரர் - சவுந்தர நாயகி அம்மன் கோயிலில் பங்குனி திருவிழா நடந்து வருகிறது.

தினசரி அம்மனும் சுவாமியும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகின்றனர்.

நேற்று 5ம் நாள் விழாவை முன்னிட்டு அம்மனும், சுவாமியும் குதிரை மற்றும் யானை வாகனத்தில் வீதியுலா வந்தனர். ஏப்.9ம் தேதி திருக்கல்யாணமும், 10ம் தேதி தேரோட்டமும் நடைபெற உள்ளது.

Advertisement